சொல்லாத வார்த்தைகள் சொர்க்கத்தில்...!
ஒருவன்...
அவளுக்கான ஒருவன்...
நெஞ்சோடும் உயிரோடும்
விளையாடும் காதலுடன்..
மனதில்
என்றென்றும் தயக்கமுடன்..!
தமிழே தமிழே
எந்தன் மொழியாயினும்,
இனிக்க இனிக்க
பேசியதெல்லாம்..
அழைபேசி
கேட்டதெல்லாம்..
குறைவுதான் மொத்தத்தில்....
என்றும்
நான்
சொல்லாத வார்த்தைகள்
சொர்க்கத்தில்...!
என்றும்
என்றென்றும்
என் மனதோடு மட்டும்
ஒலிக்கின்ற வார்த்தைகள்..
என்செவி மட்டும்
உணர்கின்ற வார்த்தைகள்..
பிறர் அறியாத
வெளியுலகம் பாரத்திடாத வார்த்தைகள்..
தவம் கிடந்து
தவித்தேனும்
இதழ்கள் அடையா வார்த்தைகள்..
நான்
சொல்லாத வார்த்தைகள்
சொர்க்கத்தில்..!
கல்லூரி
அறிமுகநாளின்
அறிமுகத்திலும்..
உன்னை
அறிந்துகொள்ளும்
ஆர்வத்திலும்..
வகுப்பு பாடம்
நோக்காமல்,
வருகைப்பதிவேட்டை
கவனித்தேன்..!
உன் பெயர் வருகைக்காக...
தினம்தினம்
உணரும் சுகமது!
சொல்லில்
அடங்கா சுகமது!
இன்றும்
சொல்லக் கிடைக்காத பதமது!!
என்றும் உனக்காக
காத்திருக்கும் வார்த்தைகள்..
உனக்கான வார்த்தைகள்..
நான்
சொல்லாத வார்த்தைகள்
சொர்க்கத்தில்...!
கதிரவனும்
கண்விழிக்கா வேளையிலும்
உன்
காலைவணக்க குறுஞ்செய்தி!
யாரும் அறியாமல்
சிரித்திட்டேன்..
உச்சரித்த சொற்களை
உன்னிடம் மறைத்திட்டேன்..
என்
இதய தோட்டத்தில்
அன்றும்
வசந்தகால பூக்களாய்..
உதிராமல் குலுங்கும்
உனக்கான வார்த்தைகள்..
நான்
சொல்லாத வார்த்தைகள்
சொர்க்கத்தில்...!
எளிதில் சென்றிடுவாய்
சண்டையிட்டு..
இருந்தும் பேசிடுவாய்
எனை காக்கவைத்து..
உன்
அர்த்தமில்லா கோபம்!
அழகான கோபம்!
என்னை கொல்லுதடி..
போதும்!
இந்தமுறை,
எனக்கான முறை..
கோபமொன்று உன்மேல்
படத்தான்
முடிவெடுத்தேன்..!
என்ன செய்வது?
உன் சிரிப்பினின்றும்
சின்னதாய் sryயினின்றும்
குளிர்ந்துவிடுகிறேன்...!
அந்த நொடியும்
அழைக்கின்றன..
உனக்கான வார்த்தைகள்...
மாலை நேரத்தில்
மரத்தடியில்,
மரத்தின்
இலையோர இடைவெளியில்..
என்
தொலைதூர பார்வையின்
விளிம்பில்..
உன்
ஒய்யார நடையழகில்....!
ம்ம்ம்...
என்ன சொல்ல பெண்ணே..
விடுதலை கேட்டு
துடிக்கின்றன..
உனக்கான வார்த்தைகள்..
நான்
சொல்லாத வார்த்தைகள்..
என்றும் அவை
சொர்க்கத்தில்...!
ரயில்பயணம்
எனக்கு சிறப்புதான்!
அழைபேசியில்
நாம் உரையாடும்போது...
அன்றும்
உச்சரித்த சொற்கள்
காற்றோடுதான்..
உதிராத சொற்கள்
என்மனதோடு..
உனக்காக..
நான்
சொல்லாத வார்த்தைகள்
சொர்க்கத்தில்...!
பருக்காலத் தேர்வும்
பயத்தால் நீ
பதறி அழும்போதும்
உள்ளத்தில்
குமுறும் வார்த்தைகள்..
உனக்கான வார்த்தைகள்..
நான்
சொல்லாத வார்த்தைகள்
சொர்க்கத்தில்...!
இவையாவும் சொல்லிவிடவில்லை
சொல்லிடும் நாளும்
வெகுதொலைவில் இல்லை..
உலகம்
ஒருநாள் அழியும்!
உடலும்
ஒருநாள் அழியும்!!
எனவே
இறுதியாக..
இதுவே
என்சொற்களின்
backup ஆக..!
No comments:
Post a Comment