Saturday, 6 June 2020

செஞ்சட்டை பேசும்!




பேதமில்லை எங்கும்
போதனையைச் சொல்லி
சொப்பனமா வாழ
சொற்ப கூட்டம் துடிக்குது..


ஆறறிவு கொண்டும்
சக உயிர குடிக்கும்..
வானவில்ல ரசிக்கும்..
வர்ணங்களா பிரிக்கும்..
கொத்தடிமையா நடத்தும்..
சொப்பனமா வாழ
சொற்ப கூட்டம் துடிக்கும்..


மண்டியிட்ட மனிதருக்கும்
மல்லுக்கட்டும் மனிதருக்கும்
நெல்லுமணி சொந்தமில்ல..
பூமியத்தான் பிளந்தும்
விண்வெளிய கிழித்தும்
விஞ்ஞானம் முன்னேறி
சல்லிக்காசு சொந்தமில்ல..
பொருள் சேர்க்க மோகமில்ல..

பசியோடு தூங்கும்
நரம் எல்லாம் இங்க
பசி போக்க உழைக்கும்..
நாளெல்லாம் உழைக்கும்..
சோறு தண்ணி இல்லாம
குடும்ப வறுமைக்காக உழைக்கும்..
உழைப்பெல்லாம் ஏய்க்கும்
முதல் என்ற தந்திரத்தை
செஞ்சட்டை உடைக்கும்..


எல்லாமே எல்லாருக்கும்
பொதுவென்று எடுத்துரைக்கும்
பொதுவுடைமை மந்திரத்த
செஞ்சட்டை பேசும்..!


வெவ்வேறு நாடானாலும்
மொழிவேறு மதம்வேறு ஆனாலும்..
பெண்ணென்று
நிறமென்று தீட்டென்று
ஒதுக்கப்படும் எல்லாருக்கும்
ஒடுக்கப்படும் எல்லாருக்கும்
சமஉரிமை தத்துவம்
செஞ்சட்டை பேசும்!!


இருட்டில் இருக்கும் யாவருக்கும்
அமைதியான விடியல் இல்ல..
தோள் கொடுத்து ஒன்றுபட்டு
தோழன்என்று மார்தட்டு..
சுத்தியுண்டு புத்தியுண்டு
அறியாமை களைஎடுக்கும்
அரிவாள் பொதுவுடைமை அறிவால்..
இருள் விலகி வழி பிறக்கும்!!




இருட்டில் இருக்கும் யாவருக்கும்
எப்போதும்
செஞ்சட்டை தோள் கொடுக்கும்!


No comments:

Post a Comment