Tuesday, 24 March 2020

பேரணை

பெருவெள்ளம் 
தடுக்கும் பேரணை 
நன்று!

பேரணையின் வலியோ
காட்டாற்று அழுத்தம்கண்டது..
காடு மலை சோலை
கண்டு வந்த நதியோ
மரம்மென்ன மலரென்ன 
பேதமின்றி மோத..
எதிர்த்து நின்ன 
யாவரையும் 
தன்னுள்ளே அடக்கித்தான்
நெடுந்தூரம்  குளிர்வித்து
மண்ணெல்லாம் உயிர்ப்பித்து
செல்லுமிடம் அறிந்திடாமல் 
செய்தபலன் பெற்றிடாமல்
உனக்கான வழியும்
உன்னாலே உண்டாச்சு!
மாறாப் புன்னகையும் 
விடையில்லா வாழ்க்கையும்
எப்போதும்
புதிர்தான்.
அரிதாய்வரும் 
பேரலையும் 
ஊடலாய் மோத..

அத்தனையும்
எதிர்ப்பார்த்து
எதிர் பார்த்து
தடுக்கும் பேரணையும்
நன்று!

பெருவெள்ளம்
தடுக்கும் பேரணை
நன்று!








Friday, 13 March 2020

Reservation Quota

பல ஆண்டு காத்திருந்து
ஊரோரம் கிடைச்ச இடம்..
கிடைச்ச இடமும் கோட்டாவுல
எல்லாருக்கும் பிடிச்சாலும்
பெருமையா பேசுனாலும்
வரலாறு இல்ல
இருக்கப்போவதும் இல்ல..
காவக்காத்து இருக்கனும்.
நீ காவக்காத்து இருக்க ..
பெரிய வயித்து பிள்ளையும்
வில்லுக்கார அண்ணன் தம்பி
இங்க வந்து குடியேறி
மாறிப்போன
பண்ணையாரா..
கட்டுக்கத மாயக்கத
பூலோகம் அளந்த கத 
சுட்டெரிக்கும் வின்னவன
நல்லரவன் முழுங்கும் கத
கேட்டு கேட்டு 
பழகிப்போகி
செய்யும் தொழில
இனமெனப் பாத்து
காவக்காக்க விட்டாச்சு..
மாயாண்டி சடையான்டி
முனியாண்டி
பேச்சியம்மா
காட்டுக்குள்ள விட்டாச்சு..
கம்யூனிட்டி சர்ட்டிபிகேட்ல
என்னைக்குமே கோட்டாவுல
கடவுள்தான் சத்தியமா
ஆனாலும் ஃஎப்சி இல்ல...!



Thursday, 12 March 2020

முதல் கைலி

கட்டைஅடுக்குன காசுல
குருவிபோல சேர்த்துகொஞ்சம்
வாரத்தவணை செலுத்திகொஞ்சம்
அரும்புமீசை இராசாவுக்கு
புதுக்கைலி வாங்குன..
முளைக்காத மீசையத்தான் முறுக்கிவிட்டு
கஞ்சிபோட்ட கைலியத்தான் மடிச்சுகட்டி 
பவுசா நா நடந்துவர..
கன்னத்துல கையவைச்சு நீபாக்கும்போதும்,
தென்பாண்டி நாட்டுக்குத்தான்
அரசனாகிப் போனேன்!!